வாட்ஸ்அப்பில் location-ஐ ஷேர் செய்வது எப்படி ??
நீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்கள்
நண்பர்களையோ அல்லது அவர்கள் இடத்திற்கு நீங்களே செல்ல விரும்பினால், உங்கள்
location-ஐ வாட்ஸ்அப் வழியாக ஷேர் செய்யலாம்.
இதில் லைவ் location-னும் ஷேர் செய்ய
முடியும். இந்த அம்சத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் நீங்கள் அதற்காக
Go to chat > tap on attachment > select location – இதை தேர்வு
செய்தவுடன், ஷேர் லைவ் லொகேசன் என்ற ஆப்சன் மூலம் நீங்கள் 8 மணி நேரம்
உங்கள் லைவ் லொகேசனை ஷேர் செய்யலாம்.
வாட்ஸ்அப்பில் நம்பரை save செய்யாமலே message அனுப்புவது
எப்படி?
வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு message அனுப்பவேண்டும் என்றால், நம்பரை
save செய்ய வேண்டும். இப்போது, நம்பரை save செய்யாமலும், message
அனுப்பலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க!
முதலில் உங்கள் மொபைலில் ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.
அதில் https://wa.me/ NUMBER நம்பர்
என்று இருக்கும் இடத்தில் யாருக்கு மெசஜ் அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது
நம்பரை டைப் செய்யவும்.
உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் 919990012345 என்று டைப் செய்யவும் அடுத்து இப்போது எண்டர் அழுத்தவும்
அடுத்து உங்கள் ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.
அடுத்ததாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.அவ்வளவுதான் நீங்கள் உங்கள் மெசஜை தொடரலாம்
உங்க போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி?
முதலில் பிளே ஸ்டோர் சென்று இந்த ஆப் இன்ஸ்டால் செய்யுங்க
அதில் முதலில் கிரியேட் செய்து கொண்டு
நீங்கள் வாட்ஸ்ப் ஸ்டிக்கராக நீங்கள் பயன்படுத்த விரும்பும் புகைப்படத்தை
தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய
புகைப்படத்தை தேர்வு செய்து பேக்கிரவுன்டை அழிக்க அதில் உள்ள கத்திரிகோல்
டூல் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம்
ஸ்டிக்கர் போன்று மாறிவிடும்.–இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று
ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில்
குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருந்தால் தான் அவற்றை வாட்ஸ்அப்
செயலியில் ஸ்டிக்கர் போன்று பயன்படுத்த முடியும்நீங்கள் உருவாக்கிய போட்டோ
ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம்
வாஸப்பில் உங்களுக்கு அனுப்பிய மெசஜை டிலைட் செய்துட்டாங்களா? அந்த மெசஜை நீங்க பார்பது எப்படி??
வாட்ஸப்பில் உங்களுக்கு மற்றவர்கள் ஏதோ
ஒரு மெசஜ் அனுப்பி இருப்பார்கள், ஆனா கொஞ்ச நேரத்தில் அதனை டிலைட் செய்து
இருப்பார்கள் அப்படி டெலிட் செய்த மெஸேஜ்களை மீண்டும் எப்படி பார்ப்பது
தெரியுமா..?
வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெஸேஜ்களை
திரும்பப் பெற வாய்ப்பில்லை வேறொரு செயலியின் மூலம்தான் நீக்கிய தகவல்களைப்
பெற முடியும் அதற்க்கு நீங்கள் பிளே ஸ்டோரில் சென்று whatsdelete view
deleted messagesஎன்று சர்ச் கொடுத்தால் பல ஆப்ஸ்கள் வரும் அதில் ஒரு ஆப்பை
இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்
அதன் பின்பு நீங்கள் புதியதாக இன்ஸ்டால்
செய்த அந்த வாட்ஸப் டிலைட் மெசஜ் ஆப்பில் நீங்கள் யார் உங்களுக்கு மெசஜ்
அனுப்பி டிலைட் செய்தார்களோ அந்த மெசஜை நீங்கள் அந்த ஆப்பில் சென்று
பார்த்து கொள்ளலாம்
உங்க வாட்ஸ் ஆப் மெசெஜ யாரும் பார்க்க கூடாதா? உடனே இந்த செட்டிங்கை மாத்துங்க.
சில நேரங்களில் நண்பர்கள், குடும்ப
உறுப்பினர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். உங்கள் பாஸ்வேர்டும்
அவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சூழலில், உங்கள் வாட்ஸ்அப் மெசேஜை
அவர்கள் பார்க்கக்கூடாது என்று நினைத்தால், அதற்கு என்ன செய்யவேண்டும்.
ஆண்ட்ராய்டில் Archive Chat செய்யும் வழிமுறை:
வாட்ஸ்அப் ஓபன் செய்து கொள்ள வேண்டும்
Chat பகுதியில் குரூப் மெசேஜ், தனி நபர் மெசேஜ் இருக்கும். அவற்றில்
யாருடைய மெசேஜை மறைக்க வேண்டுமோ, அதை அழுத்தி பிடிக்கவேண்டும்.
இப்போது வரக்கூடிய சேட் ஆப்ஷனில் ‘Archive Chat’ என்பதை தேர்வு செய்ய
வேண்டும்.
நீங்கள் மறைக்க விரும்பிய சேட் மெசேஜ்
எல்லாம் இப்போது Archive List இல் சென்று விடும்.சாதாரணமாக வாட்ஸ்அப் ஓபன்
செய்தால் பார்க்க முடியாது. Chat Screen இல் Archived Chats என்ற ஆப்ஷனில்
சென்றால் மட்டுமே இதை பார்க்க முடியும்.
அதை மீண்டும் லாங் பிரஸ் செய்து Unarchive
செய்தால், பழையபடி மாறிவிடும்.இந்த வசதியின் மூலம் குரூப் சேட், தனி நபர்
சேட் என எந்த மெசேஜ் சேட்டிங் வேண்டுமானாலும் மறைத்துக் கொள்ள முடியும்.
Archive என்பது உங்களது மெசேஜை டெலிட் செய்து விடாது. அதே நேரத்தில் மெமரி
கார்டிலும் சேமிக்காது.
வாட்ஸ் ஆப்பில் நீங்கள் பேசினால் போதும் அதுவே டைப் செய்து கொள்ளும் எப்படி தெரியுமா?
இந்த ஆப் நீங்கள் பேசினால் போதும் அது டைப் செய்து கொள்ளும் ஆப் டவுன் லோடு செய்ய
இந்த ஆப் மூலம் வாட்ஸ்அப்பில் நீங்கள் டைப் செய்யும்போது வழக்கமானவாட்ஸ்ஆப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு காணப்படும்,
அதைஅழுத்திவிட்டு பேசினால் அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும்.
ஸ்டேப் 1 முதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 2 அடுத்து language &
input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் ஆப்சனை செலக்ட்
செய்து என்டர் ஆக வேண்டும்
ஸ்டேப் 3 அதன்பின்பு gboard- செட்டிங்கில்
இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ABC எனும் ஆப்சனை
செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4: மேலும் gboard-செட்டிங்கில்
இருக்கும் வாய்ஸ் டைப்பிங் கிளிக் செய்து தமிழ் (இந்தியா) ஆப்சனை
தேர்ந்தெடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும்தானாக
டைப் செய்து கொள்ளும்
உங்கள் வாட்ஸ்அப் temporary பிளாக் என்று வருகிறதா? ஏன் ? காரணம் என்ன? சரி செய்வது எப்படி?
வாட்ஸப் நிறுவனம் ஓர் அறிவிப்பை
வெளியிட்டது அது என்ன வென்றால் நீங்கள் வாட்ஸப் உபயோகபடுத்தவேண்டும்
என்றால் பிளேஸ்டோரில் சென்று டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்அதிகாரபூர்வ
தயாரிப்பு இல்லாமல் இயங்கும் வேறு whatsapp களை பயன்படுத்த கூடாது அப்படி
மீறி பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸப் தடை செய்யபடும் என்று அறிவித்துள்ளது.
ஆகையால் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செய்தால் நாம் பயன்படுத்த வேண்டும்
இப்பொழுது ஒரிஜினல் வாட்ஸ்ஆப் நிறுவனம்
ஜிபி வாட்ஸ்அப் போன்ற வேறு லிங்குகளில் டவுன்லோட் செய்யப்படும்
வாட்ஸ்அப்களில் பிளாக் செய்து கொண்டு வருகிறது ஆகையால் முதல் மூன்று நான்கு
தடவை temporarily பிளாக் என்று வரும் நாம் மீண்டும் மீண்டும் அன்
இன்ஸ்டால் செய்து அதே ஜிபி வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் நம்முடைய நம்பர்
நிரந்தரமாக பிளாக் செய்யப்படும்
ஆகையால்பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஒரிஜினல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் இத்தகைய பிரச்சனையை வராது
நீங்கள் உங்கள் போன் மாற்றினாலும், உங்கள் வாட்ஸப் செய்திகள் அப்படியே இருக்க வேண்டுமா ?
நீங்கள் புதியதாக போன் வாங்கினால் அதில் உள்ள வாட்ஸப் செய்திகள் அனைத்தும்
உங்கள் போனுக்கு மாற்றுகையில், வாட்ஸ் அப்மெசஞ்சரில் உள்ள சேட் ஹிஸ்டரி
(chat history) யையும் மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் மைக்ரோ எஸ்.டி. கார்ட்பயன்படுத்துபவராக இருந்தால், இதுஇன்னும்
எளிதானது. Menu > Settings > Chat settings > Backup
conversations என்று சென்று இவற்றைப் பதிவு செய்துகொள்ளலாம்.
வாட்ஸ்அப்பில் automatic media download-ஐ எப்படி நிறுத்துவது?
automatic
media download மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ போன்றவற்றை தானாக
டவுன்லோடாகி, கேலரி மற்றும் மியூசிக் பிளேயரை ஸ்டோரேஜை
ஆக்கிரமித்துகொள்கிறதா?
வாட்ஸ் அப்பில் வரும் போட்டோக்கள் தானாக டவுன்லோடு ஆவதை
கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு
சென்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்
உங்கள் வாட்ஸப் மெசஜலில் நீங்கள் டிலைட் செய்த மெசஜ் மீண்டும் பெற வேண்டுமா ?
வாட்ஸ் அப் செயலி தினமும் உங்கள் மெசேஜ்
அனைத்தையும்பேக் அப் செய்கிறது. எனவே, அண்மையில்நீங்கள் அழித்த, நீக்கிய
மெசேஜை மீண்டும்பெற வேண்டும் என எண்ணினால், வாட்ஸ்அப் செயலியை அன்
இன்ஸ்டால் செய்து,பின் மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.
அப்போதுபேக் அப் செய்தவற்றிலிருந்து
தகவல்களைமீண்டும் கொண்டு வரவா? என்று கேட்கும்.சென்ற ஏழு நாட்களில்
பரிமாறிக்கொள்ளப்பட்ட மெசேஜ்கள் அனைத்தும்கிடைக்கும்.