ஒரு செயல் தனக்கு ஏற்புடையதாக அமைந்துவிட்டால் அந்தநாள் நல்ல நாள் என்றும்., அதே செயல் ஊறு ஏற்பட்டதாக அமைந்துவிட்டால் அது கெட்டநாள் என்றும் பரவலாக மக்கள் நம்புகிறார்கள்...
அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மை...
இதுபோன்ற மூடநம்பிக்கைகளை கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் முதல், ஆண்கள், பெண்கள் நன்கு படித்த இளைஞர்கள், முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பரவலாகக் காணமுடிகிறது...அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மை...
பொதுவாக இது பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதை பார்க்கின்றோம்...
ஒருநாள் என்பது நல்ல நாள் அல்லது கெட்ட நாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்ட நேரமாக எப்படி அமையும்...?
ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது...
அதேபோல், “அவருக்கு நேரம் சரியில்லை; இவருக்கு நல்ல நேரம்; நல்ல காலம்,; கெட்ட காலம்” என்று நிகழ்வுகளை நேரத்தோடு தொடர்பு படுத்துவதும் தவறான அடிப்படையில் அமைந்த ஒரு மூட நம்பிக்கை ஆகும்...“
இந்த மாதத்தில் இந்த நாளில் ,அல்லது., இந்த நேரத்தில் சில புதிய செயல்கள்,, திருமணம்,, புதிய வீடு புகுதல், வியாபாரங்கள் போன்ற நல்லவற்றை துவக்கக்கூடாது, அப்படி துவங்கினால் ,அது நிறைவேறாது; அது கெடுதலாகத்தான் அமையும்,; மற்றும் அது இழப்பை ஏற்படுத்தும்” என்று கருதி அவற்றைத் தவிர்த்து எச்சரிக்கையாக நல்லநாள், நல்ல நேரம் பார்த்து செய்கின்றார்கள்...
அப்படி நல்ல மாதம்,,நல்ல நாள் பார்த்து செய்யப்பட்ட எத்தனையோ திருமணம் போன்ற செயல்கள் கெடுதியையும், மண விலக்குகளையும், விபத்து,, தற்கொலை போன்ற உயிரிழப்பையும் பெரும் துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நாளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்...
அப்துல் கலாமிடம் ஒருமுறை ஒரு மாணவி, ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள்...
அதற்கு அப்துல் கலாம்,
‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல்... படாவிட்டால் இரவு.. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்...
ஆம் நண்பர்களே...!
நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் நாம் நமது வசதிக்காக வைத்துக் கொண்டது...!
நம் மீதும், நம் செயல்கள் மீதும் நம்பிக்கை இல்லாத போது ''நல்ல நேரங்களில்'' சிக்கிக் கொள்கின்றோம்...!!
நேரம் என்பதை நாம் வகுத்துவிட்டோம், அதன் பாதையில் அது செல்கிறது. இதில் நல்ல நேரம் எங்கே, கெட்ட நேரம் எங்கே இருக்கிறது...?
ஒரு முறை இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், பின்பு எல்லாவற்றிற்கும் ''நேரம், காலம்'' பார்க்க ஆரம்பித்து விடுவோம்...!
-உடுமலை சு. தண்டபாணி