அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர, ஜூலை, 15 முதல், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நேற்று வரை, 1.26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதையடுத்து, மாணவர்களின் சான்றிதழ்கள், ஆன்லைன் வழியாக சரிபார்க்கப்பட உள்ளன. www.tneaonline.org என்ற இணையதளத்தில், வீட்டில் இருந்தபடியே சான்றிதழ் பிரதிகளை, மாணவர்கள் பதிவேற்றம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது. வரும், 20ம் தேதி வரை, சான்றிதழ்களை பதிவேற்றலாம்.
அதேநேரத்தில், விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் ஒளிப்பதிவுகளை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம், இன்று துவங்க உள்ளது.வரும், 10ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டுமென, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, http://tngasa.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.









