
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், 2019ம்
ஆண்டு இந்திய குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன்
குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டத்தை சேர்ந்த மு.பூரணசுந்தரி
மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த டி.பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி,
நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அரசு நலத் திட்டங்களை
மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் சிறப்பான
முறையில் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது, சமூக
நலத்துறை அமைச்சர் சரோஜா, தலைமை செயலாளர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார், இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ்
உடனிருந்தனர்.







