
சீத்தாபழம் (Custard Apple) தற்போதைய சீசன் பழமாகும். இது ஒரு சுவையான பழமாக மட்டுமல்லாமல், நம் தோல், முடி, கண்பார்வை, மூளை மற்றும் ஹீமோகுளோபின் அளவிற்கு நல்லது. இந்த பழத்தைப் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளைப் பற்றியும் அவற்றை ஏன் நம்பக்கூடாது என்பதையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.
சீத்தாபழம்
அல்லது Custard Apple என்பது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான
பழமாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும்
மெக்னீசியம் போன்றவை உள்ளன. இது சீத்தாபழ சீசன் பருவம் என்பதால், உங்கள்
உணவின் ஒரு பகுதியாக இதை சேர்த்துக்கொள்வது நல்லது. பிரபல ஊட்டச்சத்து
நிபுணர் ருஜுதா திவேகர் உங்கள் உணவில் சீத்தாபழம் சேர்ப்பதன்
முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார். அவர், தனது சமீபத்திய போஸ்ட்
ஒன்றில், சீத்தாபழம் பற்றிய சில கட்டுக்கதைகளைப் பற்றியும், உண்மைகளைப்
பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பருவகால மற்றும் ஆரோக்கியமான இந்த
உள்ளூர்பழத்தைப் பற்றி ருஜுதா என்ன கூறுகிறார் என்பதை இங்கு
அறிந்துகொள்ளுங்கள்.
சீத்தாபழம் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்.
1. நீரிழிவு நோயாளிகள் சீத்தாபழத்தை தவிர்க்க வேண்டும்..!
சீத்தாபழம்
54-இன் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழமாகும். இது நீரிழிவு
நோயாளிகளுக்கு பாதுகாப்பான பழமாகும். அதுமட்டுமல்லாமல், GI 55 மற்றும்
அதற்குக் குறைவான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு
பரிந்துரைக்கப்படுவதாகவும் ருஜுதா கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சீத்தாப்பழம் மிக நல்லது.
Photo Credit: iStock
2. இதய நோயாளிகள் சீதாபலைத் தவிர்க்க வேண்டும்..?
உண்மை
என்னவென்றால், சீத்தாபழம் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
பயக்கும். இதில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற நன்மை
பயக்கும் தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமான இதயம் மற்றும் சுற்றோட்ட
அமைப்புக்கு, இந்த பழம் உங்கள் உணவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும்
நல்லது.
3. சீதாபல் செரிமானத்திற்கு நல்லது..!
இங்குள்ள
கட்டுக்கதை என்னவென்றால், அதிக எடை கொண்டவர்கள் இந்த பழத்தை தவிர்க்க
வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், சீதாபல்
செரிமானத்திற்கு நல்லது மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் என்று ருஜுதா
தெரிவிக்கிறார். இத்னால் அமிலத்தன்மையைத் (Acidity) தடுக்கவும், புண்களைக்
குணப்படுத்தவும் முடியும். சீத்தாபழம் வைட்டமின் பி complex-ன் நல்ல
மூலமாகும், குறிப்பாக வைட்டமின் பி 6.
4.PCOD உள்ள பெண்கள் சீத்தாபழத்தை தவிர்க்க வேண்டும்..?
இது
சீத்தாபழத்தைப் பற்றிய மற்றொரு பிரபலமான கட்டுக்கதை ஆகும். ஆனால்,
சீத்தாபழம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலம் என்பதால், அதற்காகவே,
பி.சி.ஓ.டி உள்ள பெண்களுக்கு சீத்தாபழத்தை சாப்பிடலாம் என்று ருஜுதா
கூறுகிறார். இது கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வைக் குறைக்கும்,
எரிச்சலைக் குறைக்கும் தன்மை கொண்டது.
எனவே, அனைத்து
வயதினரும் சீத்தாப்பழத்தை பயமும், குற்ற உணர்ச்சி இல்லாமலும் சப்பிடலாம்.
சீத்தாப்பழம் உங்கள் சருமத்தின் நிறம் (tone), முடியின் தரம், கண்பார்வை,
மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். இது
anti-obesogenic, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு
பண்புகளைக் காட்டும் உயர் பயோஆக்டிவ் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. அதை
உங்கள் கைகளால் சாப்பிடுங்கள், உங்கள் விரல்களை நக்கி அனுபவித்து
சாப்பிடவும் என்கிறார் ருஜுதா

நீரிழிவு நோயாளிகளுக்கு சீத்தாப்பழம் மிக நல்லது.
Photo Credit: iStock