
சென்னை : தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா
என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர்
பழனிசாமி இன்று(செப்.,29) ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் பொது ஊரடங்கு
செப்., 30ம் தேதி வரை அமலில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு
தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.திரையரங்குகள், நீச்சல் குளம்
போன்றவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு
மேல் கூடக்கூடாது. திருமணத்தில் 50 பேர்; இறுதி சடங்கில் 25 பேருக்கு மேல்
பங்கேற்கக் கூடாது என்பது உட்பட சில கட்டுப்பாடுகளும் உள்ளன.சில
மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது.
எனவே பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா
என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 10:00 மணிக்கு தலைமை
செயலகத்தில்'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த
உள்ளார்.மதியம் 3:00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை
முதல்வர் வெளியிடுவார்.