
வரும் டிசம்பர் 2 -ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் மாணவர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொடிய உயிர் கொல்லி வைரஸான கொரோனா தொற்று பரவலால் காரணமாக , கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து, மாணவர்களின் எதிர்காலம் கருதி ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் , அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சி ல் மற்றும் பல்கலை மானியக் குழு வழிகாட்டுதலின்படி , முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் , வரும் , 2 - ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும், வரும் 2-ம் தேதி முதல் கல்லுாரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்ட மாணவர்கள் ஏற்கனவே தங்கிய விடுதிகளில் தங்கி கொள்ள உரிய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த எட்டு மாத இடைவெளிக்கு பிறகு கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.









