இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வரும் 2021 ஆங்கில புத்தாண்டு விடுமுறை ஜனவரி 1ம் தேதி, ஜனவரி 12 முதல் 15 வரை பொங்கல் பண்டிகை விடுமுறை, ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
பு னித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 2 - ம் தேதி , தெலுங்கு புத்தாண்டு ஏப்ரல் 13 - ம் தேதி , த மிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு ஏப்ரல் 14 - ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 14 -ம் தேதி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 21 -ம் தேதி , மொஹரத்தை முன்னிட்டும் ஆகஸ்ட் 20 -ம் தேதி, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 30 -ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 -ம் தேதி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி அக்டோபர் 14 மற்றும் 15 -ம் தேதிகள், மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 19 -ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், நவம்பர் 3 -ம் தேதி முதல் நவம்பர் 5 -ம் தேதி வரை தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது.
மற்றும் மே 1 -ம் தேதி முதல் 30 -ம் தேதிவரை கோடை விடுமுறையும், அக்டோபர் 9 -ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையும், டிசம்பர் 25 -ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையாகும்.
ஆனால், ஜனவரி 23, மார்ச், ஏப்ரல் 17, ஜூன் 5, ஜூலை 3, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4, அக்டோபர் 23, நவம்பர் 20, டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் கிழமை நீதிமன்றங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.









