
ஹெல்மெட் இல்லை,சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் காட்சிப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாசகங்களை காட்சிப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.








