தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகரில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவாகியுள்ளது.








