தமிழக காவல்துறையினருக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை - டி.ஜி.பி உத்தரவு
தமிழக காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக புகார்கள் இருந்துவருகின்றன.
கொரோனா பாதிப்பு, பணிச்சுமை காரணமாக தற்கொலை, மாரடைப்பு என காவல்துறையினர் இறந்ததாலும், அவர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்ததாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு காவல்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் கூட இது உத்தரவோடு நின்றுவிடாமல், காவல்துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு என்பதை செயல்படுத்தி காட்ட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.