பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு.
100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது.
பட்டாணியில்
ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு
இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்
அவசியம். ஃபோலேட் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக்
கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது.