கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட
ஒரு வாரத்திற்குள் ஆசிரியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்ட நிலையில் சில பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.பெலகாவியில்
கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்ததை அடுத்து ஆசிரியர்கள் 22 பேர் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆசிரியர்கள் 6 பேர்
உள்பட 10 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து 7 பள்ளிகள்
மூடப்பட்டுள்ளன.
இதனால்
பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதித்த மாணவர்களுக்கு
தரமான சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும்
மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.








