நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி
பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் ஆன்லைன் மூலமாக நடத்துகிறோம்’ என
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள
குள்ளம்பாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள
1200 பள்ளிகள், குறைந்த மாணவர்கள் உள்ள 2 ஆயிரம் பள்ளிகளை நூலகமாக
மாற்றுவது குறித்து இதுவரை ஆணை பிறப்பிக்கவில்லை. இந்தியாவில் தமிழகத்தில்
மட்டும்தான் இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் பயிற்சி
பெற 21 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். தற்போது 5 ஆயிரத்து 817 மாணவர்கள்
பயிற்சி பெறுகிறார்கள். தற்போது ஆன்லைனில் நடத்தப்படும் நீட் தேர்வு
பயிற்சி, பள்ளி திறப்புக்கு பின் நேரடியாக நடத்தப்படமாட்டாது. காரணம் நீட்
உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி
பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் சிறந்த பயிற்சியாளர்களை வைத்து
ஆன்லைன் மூலமாக நடத்துகிறோம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.