அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம்
கொண்டதே குடம் புளி. இது என்னடா புதுசா வயித்துல புளியை கரைக்கிறாங்கன்னு
நினைக்க வேண்டாம்.
நாம் பயன்படுத்தும் புளியை போன்று விளைச்சல்
இல்லாதது. பெரும்பாலும் மலைபிரதேசங்களில் விளையக் கூடியது குடம்புளி.
தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தான் அதிகமாக விளைகிறது
குடம்புளி, இன்றைய நாளில் கேரள மக்கள் அதிகமா குடம்புளியை தான் பயன்படுத்தி
வருகின்றனர், இந்த குடம் புளிக்கு மலபார் புளி என்று வேறு பெயரும் உண்டு.
மருத்துவ புளி என்றழைக்கப்படும் குடம் புளி மருத்துவ குணங்கள் ஏராளமாய்
உள்ளது குடம் புளி, அதனால் இதனை மருத்துவ புளி என்றும் அழைக்கின்றனர்.
இதனை கேரளாவில் அன்றாட சமையலுக்கே பயன்படுத்தி
வருகின்றனர், இந்த குடம் புளியை சமையலில் சேர்த்து சமைத்தவுடன் புளியை
வெளியே எடுத்து விடவேண்டும்.
நேரம் ஆக ஆக சமைத்த உணவில் புளிப்பு சுவையை அதிகரித்து கொண்டேபோகும்.
நாம் புளிசேர்க்கும் அனைத்து உணவுகளிலும் குடம் புளியை சேர்ப்பதால்,
புளிப்பு சுவையை தருவதுடன் சிறந்த செரிமானத்தை தரவல்லதாக குடம் புளி
உள்ளது.
குடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் எனும்
ஆசிட் இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை படைத்தது என்பதுடன் உடலில்
கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்தும்.
உடல்
மெலிவிற்கான தயாரிக்கப்படும் பல மருந்துகளில் பிரதான மருந்தே குடம் புளி
தான். எனவே உடலை இயற்கையான முறையில் மெலிய செய்ய விரும்புபவர்கள் அன்றாட
சமையலில் குடம் புளியை பயன்படுத்தி கொள்ளலாம்.குடம்புளியிலிருந்து
தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுபோக்கை குணப்படுத்த
தரப்படுகிறது.
குடம்புளியின் பழத்தோலையில் இருந்து சாறு எடுத்து வாதம்
மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக தரலாம். இந்த குடம் புளி மரத்தின்
பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு
பயன்படுத்தப்படுகிறது.
கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.
கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர்,
விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள்,
சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.
குடம் புளி உணவு வகைகள்:-
குடம்புளியை கொண்டு சாம்பார், கார குழம்பு, ரசம் போன்றவையை அன்றாடம்
சமைத்து உண்ணலாம், மேலும் இதனை வெல்லத்துடன் கலந்து பானகம் போல செய்தும்
சாப்பிடலாம்,
குடம்புளியின் பழப்பகுதியை அப்படியே பயன்படுத்தலாம்,
இல்லையெனில் நன்கு காய வைத்த குடம் புளி கிடைக்கின்றன அவற்றையும்
பயன்படுத்தி கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு
நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது
நல்லதே.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
விஷ உணவுகளுக்கு விடை, உடல் நலம் காக்கும் குடம் புளி:-
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |