14 நாள் பொது முடக்கம் :
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரங்கில் அனைத்து மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கவும், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Lockdown May 10 to 24 - TN Government Press News - Download here...