தினமலர் கல்விமலர் இணையதளத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில், நமது
கல்விமலர் இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2011 மற்றும் 2012ம்
ஆண்டுகளில், தினமலர் இதழில் வெளிவந்த மாதிரி வினாத்தாள்கள் இதில்
இடம்பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள்,
ஆங்கிலம் முதல் தாள், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய
பாடங்களின் வினாத்தாள்களும், பிளஸ் 2 வகுப்பு தமிழ் முதல் மற்றும் இரண்டாம்
தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள், கணிதம், இயற்பியல்,
வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணக்கு பதிவியல் வினாத்தாள்கள்
இடம்பெற்றுள்ளன.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் நெருங்கும் இந்நேரத்தில், இந்த,
மாதிரி வினாத்தாள்களைப் பார்த்து, மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற,
கல்விமலர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வினாத்தாள்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். http://kalvimalar.dinamalar.com/tamil/question_paper.asp