பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி:
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக,
பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும்
பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.கோவை ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை இணைந்து பாரத
புத்ரா என்கிற நிகழ்ச்சியின் மூலம் இதற்கான பயிற்சி முகாமை நடத்த உள்ளன.
இந்தப் பயிற்சி முகாமில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற உள்ளது.
கோவை தடாகம் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 9843379872 என்ற எண்ணில்
பிரதீப் யுவராஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். மேலும்
கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அனைத்துக் கிளைகளிலும் விண்ணப்பப் படிவங்களைப்
பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் www.srikrishnasweets.net என்ற இணையதளத்திலும் விண்ணப்பப் படிவம் கிடைக்கும்.
சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் குமார் பாபு அவர்கள்
மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் தங்களது
ஞாபகத் திறனை வளர்த்துக்கொள்வதோடு எளிய முறையில் கற்பது தொடர்பாகவும்
பயிற்சி பெற முடியும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதோடு,
வாழ்க்கையில் சிறந்த நபராக வரவும் இந்தப் பயிற்சி உதவும்.
நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள அதே பள்ளியிலேயே 12 ஞாயிற்றுக்கிழமைகள் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...