செப்டம்பர் 18-ல் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்:
ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்ப்புக் கூட்டம் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் பெயர், முகவரி, தொலைபேசி எண்,
கடைசியாக பணிபுரிந்த அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம், ஓய்வுபெற்ற நாள்,
ஓய்வூதிய புத்தக எண், கோரிக்கை விவரங்கள் மற்றும் கோரிக்கை நிலுவையில் உள்ள
அலுவலகம் உள்ளிட்ட தகவல்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, ராஜாஜி
சாலை, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.








