23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை:
பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர் களுக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு, ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் துவங்கப்பட்டு 23
ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, 8ம் வகுப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை 14
லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்களின் பொருளாதார நிலையும் பல மடங்கு
உயர்ந்து உள்ளது. பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும், இந்த ஊக்கத் தொகை
மட்டும் இதுவரை உயர்த்தப்படவில்லை. கடந்த 1991ல், இத்தொகை பெற மாணவரின்
பெற்றோர் வருவாய் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக இருந்தது. தற்போது, ரூ.ஒரு
லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை மட்டும் மாற்றம் இல்லாதது
ஏமாற்றம் அளிக்கிறது என, மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:
தற்போது, 8ம் வகுப்பு படிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்த நிலையில்
ஒரு மாவட்டத்திற்கு, குறைந்த பட்சம் 500 மாணவர்களை தேர்வு செய்து, உதவித்
தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி, வழங்க வேண்டும், என்றார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...