வெளிநாட்டுப் படிப்பு: டோபல் தேர்வு அறிவிப்பு:
இந்தாண்டுக்கான "டோபல்" தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்த்த
பிற மொழிகளை தாய்மொழிகளாக கொண்டவர்களின் ஆங்கில அறிவை சோதிப்பதற்காக,
"டோபல்" (டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் அஸ் எ பாரின் லாங்வேஜ்) தேர்வு
நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் செயல்படும் கல்வி
நிறுவனங்கள், விண்ணப்பதாரர்களிடம் "டோபல்" மதிப்பெண் பற்றி கேட்கின்றன.
இ.டி.எஸ்., எனப்படும்
"எஜுகேஷனல் டிரஸ்டிங் சர்வீஸ்" என்ற அமைப்பே இந்த தேர்வுகளுக்கு
பொறுப்பேற்றுள்ளது. வினாக்களை அமைப்பது, தேர்வுகளை நடத்துவது, மதிப்பெண்களை
அனுப்பி வைப்பது இவர்களின் பொறுப்பு.
இந்தியாவில் இத்தேர்வு, 26 மையங்களில், ஆக.10 முதல் நவ.24
வரை வெவ்வேறு தேதிகளில் நடக்கிறது. இதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாய்.
சென்னை தேர்வு மையத்தில் நவ.2, 9, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இன்டர்நெட் சார்ந்த "டோபல் ஐ.பி.டி.," தேர்வுகளில், நான்கு
விதமாக மாணவர்கள் சோதிக்கப்படுகின்றனர்; கவனிக்கும் திறன், பேசும் திறன்,
எழுதும் திறன், வாசிக்கும் திறன். வெற்றிபெற தேவையான ஆங்கில அறிவு உள்ளது
என, மாணவர்கள் இத்தேர்வில் நிரூபிக்க வேண்டும்.
மாணவர்கள் ஆன்-லைன் முறையில், இந்த தேர்வுக்காக எளிதாக
பதிவு செய்து கொள்ளவும், மதிப்பெண்களை பெறவும் முடியும். வெளிநாட்டு
கல்வித் திட்டத்துக்கு இந்த மாணவர் ஏற்றவரா என்பதை இந்த தேர்வு
சோதிக்கிறது. வாசித்த, கவனித்த விஷயங்களைப் பற்றி திறமையாக பேசவும்
எழுதவும் முடிகிறதா என்பது இந்த தேர்வில் சோதிக்கப்படுகிறது. இது தான்
வெற்றி பெற அவசியம்.
படிப்பில் வெற்றி பெறத்தேவையான ஆங்கிலத்தொடர்பு திறன் உள்ள
மாணவர்களை கல்வி நிறுவனங்கள் இதன் மூலமாக தேர்வு செய்கின்றன. டோபல் தேர்வு
மதிப்பெண்கள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
மேலும் விபரங்களுக்கு : www.ets.org/toefl/







