பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள்
மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து
தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல்
வெளியாகியுள்ளது.
இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,
இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி அவர்களையும்,
இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும்,
இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும்,
இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்) திருமதி.லதா அவர்களையும்,
இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்) திரு.செல்வராஜ் அவர்களையும்,
இணை இயக்குநர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திரு.நாகராஜ முருகன் அவர்களையும்,
இணை இயக்குநர் (மாநில கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) திருமதி.ஸ்ரீதேவி மற்றும் உமா அவர்களையும்,
இணை இயக்குநர் (அரசுத் தேர்வுகள் இயக்ககம்) திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களையும்,
இணை இயக்குநர் (நூலகம்) திருமதி.சுகன்யா அவர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.