பிளஸ்-2 துணைப் பொதுத் தேர்வு விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி:
பிளஸ்-2 துணைப் பொதுத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித்
திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத்
தவறியவர்களிடமிருந்து, "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tndge.in இணைய தளத்தில்
செப்டம்பர் 16,17-ஆம் (திங்கள் மற்றும் செவ்வாய்) தேதிகளில் விவரங்களை
பதிவு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு விவரங்களை
பதிவு செய்ய முடியாது.
இவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை புகைப்படத்துடன் பதிவிறக்கம்
செய்து, சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில்
செப்டம்பர் 18-ஆம் தேதி நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு
சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்:
"ஹெச்' வகைத் தேர்வர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ.50 (இதர கட்டணமாக ரூ. 35)
"ஹெச்.பி.' வகைத் தேர்வர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ.187 கட்டணம் செலுத்த
வேண்டும்.
மேலும் இந்த தேர்வு கட்டணத்தோடு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000
செலுத்த வேண்டும். கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என, அரசு
தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.