கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்:
விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்
கல்லூரியில் நடப்பு 2013-14ம் கல்வியாண்டு முதல் புதிய பாடப்பிரிவுகள்
தொடங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.இளங்கலையில் பி.ஏ.,(பொருளியல்) - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வி,
முதுகலையில் எம்.எஸ்சி., (இயற்பியல்), ஆய்வியல் நிறைஞர்-எம்.பில் (வரலாறு,
கணிதம், விலங்கியல், வணிகவியல்), முனைவர் பட்டம்-பி.எச்டி.,(வணிகவியல்)
உள்ளிட்ட படிப்புகள் புதிதாக துவங்கப்படுகின்றன.
இப்பாடப்பிரிவுகளும் விண்ணப்பிக்க விரும்பமுள்ள மாணவர்கள் செப்.,16ம்
தேதி முதல் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
முழுமையான விவரங்களை பூர்த்தி செய்து செப்.,30ம் தேதி மாலை 5.00
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் முனைவர் இரா.
இராசசேகரன் தெரிவித்துள்ளார்.