தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி:
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்விதுறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 4 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக அடிப்படையில் தெரிவித்தனர்.ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராததால்,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த உறுதிமொழியிலும் தங்களுக்கு திருப்தி இல்லையென்றும், இந்த 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக தொடக்கக் கல்வி துறையிலுள்ள பல்வேறு சங்கங்கள் தங்களை அணுகியுள்ளதாகவும், அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்த முடிவு, அடுத்த நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
நன்றி - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...