நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?
1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே
சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால், கொஞ்சம்
சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி - க்கள்
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி . உடை மாற்றுவதுபோலக் காதலன் / காதலியை
மாற்றுவீர்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ஸ்டைலின்
வி.ஐ.பி. .
3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு
புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் . பிடிக்காதவர்களைத்
திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம்
சாராபாய். .
4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ? உங்கள் வாழ்க்கை
உங்கள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் .
இதில் பாரக் ஒபாமா இருப்பார் . .
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப் போட்டால்... கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம் .
கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ். .
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய
மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்... புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்காமல்
முடிவெடுப்பீர்கள் . ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா
காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் . .
7) முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப் போட்டால்... நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட்
செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங்
இதில் அடங்குவர் . .
8)
வெறுமனே பெயரை எழுதிவைத்த . அம்மாஞ்சி .
பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த வகை வி.ஐ.பி -க்கள்
எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா . .
9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம்
போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக் கலை பிடிக்கும் . முடிவெடுக்க
நின்று நிதானமாக யோசிப்பீர்கள் .
இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .
சர்.சி. வி.ராமன் .
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?







