சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை:
இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. எனவே, எங்களை தேர்வு எழுதுமாறு நிர்பந்திக்காமல் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, ‘‘ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்னரே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. எனவே மனுதாரர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் நகலை கல்வித்துறை செயலாளர், இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உள்ளிட்ட கல்வித்துறை மற்றும் வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.








