அடிப்படை ஊதியத்தை மாற்ற ஆசிரியர் கூட்டணி கோரிக்கை:
இடை நிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ. 5
ஆயிரத்து 200-ல் இருந்து 9 ஆயிரத்து 300 ஆக மாற்றி அறிவிக்க வேண்டும் என
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80 சதவீதத்தில்
இருந்து 10 சதவீதத்தை உயர்த்தி வழங்கியுள்ளதற்கு தமிழக ஆரப்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.அதே நேரத்தில் இடைநிலை
ஆசிரியர்களஇன் அடிப்படை ஊதியத்தை ரூ. 5 ஆயிரத்து 200-ல் இருந்து 9
ஆயிரத்து 300 ஆக மாற்றி அறிவித்து கிரேடு பே-வை 4 ஆயிரத்து 200 ஆக நிர்ணயம்
செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








