மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை:
மேல்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் கல்விக் கடன் திட்டத்தால்
கிராமப்புற மாணவர்கள் அதிகம் பயனடைந்தனர். ஆனால் சென்ற ஆண்டு முதல்
மேல்நிலை தேர்வில் 60 மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்க
முடியும் என கூறி வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்க மறுத்து வருகிறார்கள்.
இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்
எடுத்தும் கல்விக்கடன் பெற முடியாமல் மேல் படிப்பை படிக்க முடியாமல்
நின்றுவிடுகின்றனர். தாங்கள் அறிவித்த கல்வி கடன் மூலமாக கிராமப்புற
மாணவர்கள் அதிக அளவில் மேல் படிப்பை தொடர்ந்து படித்து வருகிறார்கள்.
தற்போதுள்ள இந்த வரையறை மூலம் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில்
பாதிக்கப்படுகின்றனர்.எனவே மேல்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும்
கல்விக்கடன் வழங்க வங்கியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.







