போட்டித்
தேர்வுகள் அதிகமாகி விட்டன. பல தேர்வுகளிலும் தகுதிநிலையாக பட்டப்படிப்பை
வைத்திருந்தாலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலிருந்து கணிசமான கேள்விகள்
கேட்கப்படுகின்றன. போட்டித் தேர்வுகளை எழுத உதவியாக பல புத்தகங்கள் வெளி
வந்த வண்ணம் இருக்கின்றன.
இதில் பலவற்றை ஆழமாகப் படித்திருந்தும்
தேர்வின்போது யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு காரணம் தற்போது
பயன்பாட்டில் உள்ள பாடப்புத்தகங்களை வாசிப்பதில்லை. இந்தக் குறையினை
போக்குவதற்கும், தற்போது பயன்பாட்டில் உள்ள பாட திட்டங்களை
தெரிந்துகொள்வதற்கும் உதவியாக தமிழக அரசு தனது இணையத்தளத்தில் ஒன்றாம்
வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடநூல்களை பதிவேற்றம்
செய்துள்ளது. இதனைப் பார்க்கவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு படிப்பவர்களுக்கான அனைத்துப்
பாடப்புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர் பயிற்சி
பட்டயப்படிப்பு படிப்பவர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார்
செய்பவர்களும் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
http://www.textbooksonline.tn.nic.in
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ மாணவர்களுக்கு வினாத்தாள்கள்
பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் டூ வகுப்புத் தேர்வுகளில் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு
உதவியாக, கடந்த கால தேர்வு வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் (2006-ஆம்
ஆண்டில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரையிலான) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கடந்த கால தேர்வு வினாத்தாள்களில் இருந்து குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆகையால் கீழ்க்கண்ட இணையதளத்தை
பார்வையிட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி
அறிவியல், வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியியல், வணிகக் கணிதம்,
வரலாறு, விலங்கியல், தாவரவியல் உள்பட அனைத்து பாடங்களுக்கான
வினாத்தாள்களையும் பார்வையிடலாம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இப்போதே இந்த கேள்வித்தாள்களை எடுத்து
வைத்துக்கொண்டு மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம்.