Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
திருவள்ளூர் மாவட்டத்தில், டி.டி., மருத்துவக் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில், கடந்த,
இரண்டு ஆண்டுகளில் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், கல்லூரி நிர்வாகம்
மாணவர்களை சேர்த்தது. அதனால், அவர்களை தேர்வு எழுத, எம்.ஜி.ஆர்., மருத்துவ
பல்கலைக் கழகம் அனுமதிக்கவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி, மாணவர்கள் தொடர்
உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கல்லூரியை அரசு வசம் கொண்டு வரவும், மாணவர்கள் சேர்க்கையை
ஒழுங்குபடுத்தவும், மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கவும், உத்தரவிடக்
கோரி, உயர் நீதிமன்றத்தில் டி.டி., மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்.,
மாணவர்கள் நலச் சங்கம் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு,
நீதிபதி சசிதரன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், "அரசுக்கும்,
மருத்துவ கவுன்சிலுக்கும், நோட்டீஸ் அனுப்பி, இப்பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார். அதற்கு, நீதிபதி சசிதரன்,
"ஒருபுறம் உண்ணாவிரதப் போராட்டம், மறுபுறம் வழக்கு என, இரண்டு நடவடிக்கைகளை
எடுக்க அனுமதிக்க முடியாது. உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை
என்றால், வழக்கை விசாரணைக்கு எடுக்க மாட்டேன்" என்றார்.
போராட்டத்தை வாபஸ் பெற, மாணவர்களுக்கு அறிவுறுத்துவதாக, மூத்த
வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்று விட்டதாக, நீதிபதியிடம்,
மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மனுவை, நீதிபதி சசிதரன் விசாரணைக்கு எடுத்தார்.
மருத்துவ கவுன்சில், தமிழக அரசு, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை சார்பில்
பதிலளிக்க, &'நோட்டீஸ்&' பெற்று கொள்ளப்பட்டது. விசாரணை, இம்மாதம்,
28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: எங்களது வழக்கு, நேற்று சென்னை உயர்
நீதிமன்றத்தில் வந்தது. நீதிபதிகள் அறிவுரைப்படி, உயர் நீதிமன்றம்
எங்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்தை
வாபஸ் பெற்று உள்ளோம். ஆனால், வழக்கு விசாரணை, அக்., 28ம் தேதி மீண்டும்
வருகிறது. ஊருக்குப் போய் திரும்புவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால்,
அதுவரை, நாங்கள் மருத்துவ பல்கலை வளாகத்திலேயே தான் இருப்போம். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








