தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 10 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்த பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவுக்கு தடை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு:
தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்த பள்ளிக்கல்வி இயக்குநரின்
உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதித்தேர்வுதமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 3 முறை ஆசிரியர் தகுதித்தேர்வு
நடத்தப்பட்டது. இந்த தேர்வு எழுதியவர்களில் குறைந்த சதவீதத்தினரே
தேர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த
நிலையில் இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித்தேர்வு எழுதி
தேர்ச்சி பெறாதவர்களை பணி நீக்கம் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி
அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி வருகின்றனர்.இந்த நடவடிக்கையை
எதிர்த்து ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகங்களும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக் கல்வி இயக்குநரின்
உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளனர். பணிநியமன ஒப்புதல்இந்தநிலையில்,
தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம்
மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-என்னை
அரசு உதவிபெறும் பள்ளியில் பணிநியமனம் செய்யும் போது ஆசிரியர்
தகுதித்தேர்வு நடக்கவில்லை. இதனால் நான் அந்த தேர்வு எழுதவில்லை. எனவே எனது
பணி நியமனத்தை அவர் அங்கீகரித்ததுடன், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு
எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார். அவர் விதித்த
கெடு இன்னும் முடியவில்லை. இதற்கிடையே என்னை பணியில் இருந்து நீக்கி கடந்த
14-ந் தேதியன்று மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். எனவே அவரது
உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதே போன்று அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் 9 பேரும் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.தடை உத்தரவுஇந்த
மனுக்கள் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. முடிவில்,
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும்
பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவுக்கும், அந்த உத்தரவின்பேரில்
மனுதாரர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால
தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த மனு குறித்து
பள்ளிக்கல்வி செயலாளர், இயக்குநர், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர்
பதிலளிக்க நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது







