8ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வி- மகாராஷ்டிராவில் இறுதி அறிவிப்பு:
மராட்டிய மாநிலத்தில் பள்ளிக் கல்வி அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதி அறிவிப்பை அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 8ம் வகுப்பு வரை, ஆரம்ப கல்வி என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் இதுதொடர்பாக கூறிவதாவது: இந்த புதிய விதிமுறை
வரும் 2014ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். RTE சட்டத்தின் கீழ்,
புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஆரம்ப
கல்வி 7ம் வகுப்பு வரை அளிக்கப்படுகிறது.
இந்த புதிய ஆரம்ப கல்வி முறை சில மாநிலங்களைத் தவிர, நாட்டின் பல
மாநிலங்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், RTE சட்டம் முழு அளவில்
நடைமுறைப்படுத்தப்படும்போது, அனைத்து மாநிலங்களிலும் இது
கட்டாயமாக்கப்படும்.
இந்த புதிய விதிமுறையின் மூலமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு அதிக
வகுப்பறைகள் தேவைப்படும். மேலும், தற்போது ஆரம்ப பள்ளி நிலையில்
பணியாற்றும் ஆசிரியர்கள், 8ம் வகுப்பு பாடத்தையும் எடுக்கும் வகையில்
தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.







