தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்:
தமிழக
அமைச்சர்கள் இலாக்காக்களில் நேற்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில், தமிழக அமைச்சர்களில், 3 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பணித்துறை பொறுப்பு, நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, கவர்னரின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில், கீழ்க்கண்ட இலாகா மாற்றங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-ஓ.பன்னீர்செல்வம்-நிதியுடன் பொதுப்பணித்துறைஇதுவரை, அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பொறுப்பில் இருந்த பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்பட பாசனத்திட்டம், செயற்திட்டப்பணிகள் இலாகாக்கள், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் இனி நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.கே.வி.ராமலிங்கம் - விளையாட்டு, இளைஞர் நலன்பள்ளிக்கூட கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் கே.சி.வீரமணி பொறுப்பில் இருந்த விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன் இலகாக்கள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இனி, கே.வி.ராமலிங்கம், விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சர் என அழைக்கப்படுவார்.கே.சி.வீரமணி - பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கூட கல்வி, தொல்பொருள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு ஆகிய இலகாக்களை கவனிப்பார். இனி, கே.சி.வீரமணி பள்ளிக்கூட கல்வி அமைச்சர் என அழைக்கப்படுவார்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.