எம்.பி.பி.எஸ்: அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வலியுறுத்தல்:
அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக்
கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே
ஏற்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரண்யம் ஒன்றியச்
செயலாளர் கோவை.சுப்பிரமணியன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை
மனு:
சென்னையில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டபோது அதில் படித்த 150 மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளில்
இடஒதுக்கீடு தந்தது பாராட்டுக்குரியது.அதே நேரத்தில் அந்த கல்லூரியில்
சேர்ந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைவிட கூடுதலாக பெற்றவர்கள் மாவட்டம்
தோறும் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாததால் தனியார் மருத்துவக்
கல்லூரிகளில் சக்தியை மீறி அதிக பணம் செலுத்தி படிக்கும்
நிலையுள்ளது.இதனால் 196.5 கட்டாப் மதிப்பெண் எடுத்தவர்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே,டி.டி மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு இணையான
மதிப்பெண்களை எடுத்தும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் அனைவருக்குமான
கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.








