பரமகுடி கல்வி மாவட்ட மாணவர்கள் சாதனை- ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு:
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண -
சாரணியர் இயக்கம், தமிழ்நாடு பிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய
புரஸ்கார்" விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் சாரண
- சாரணியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் மற்றும் ராஜ்ய புரஸ்கார்
விருதுக்கான தேர்வு நடந்தது. பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி
வெளியிட்ட முடிவுகளின் படி 21 மாணவிகள், 89 மாணவர்கள் உட்பட 110 பேர்
தேர்வு பெற்றனர்.
பரமக்குடி அரசு பெண்கள் பள்ளியில் 4 பேர், ஆயிர
வைசிய 10, கீழ முஸ்லிம் 7, சவுராஷ்ட்ர 8, அலங்கார மாதா 11, லயன்ஸ்
மெட்ரிக் 13, டான்பாஸ்கோ, நீராவி தேவாங்கர், திரு இருதய பள்ளி, கமுதி
கே.என். ஆண்கள், பெண்கள் பள்ளியில் தலா 5 பேர், பரமக்குடி வ.உ.சி., 2,
ஏ.வி., மெட்ரிக் 1, முதுகுளத்தூர் பள்ளி வாசல் 2, பிடாரிசேரி அரசு பள்ளி 9,
பெருமாள் கோவில் அரசு பள்ளி 4, பார்த்திபனூர் கிரசண்ட் 7, தூய மரியன்னை
பள்ளியில் 3 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.







