அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் ஜனவரி 2-ந்தேதி 3-வது பருவ பாடப்புத்தகம் வழங்கப்படும்-2 கோடியே 40 லட்சம் புத்தகங்களை மாணவர்கள் பெறுகிறார்கள்:
அரையாண்டு
தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2-ந்தேதி தொடங்குகின்றன. அன்று
மாணவர்களுக்கு 3-வது பருவத்திற்கு உரிய விலை இல்லா பாடப்புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.3-வது பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்பிளஸ்-2
அரையாண்டு தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 23-ந்தேதி
முடிவடைகிறது.
அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு 12-ந்தேதி தொடங்கி
23-ந்தேதி முடிவடைகிறது. இந்த இரு தேர்வுகளும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பொதுவானவை ஆகும். தேர்வுகள்
முடிவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து
பள்ளிக்கூடங்கள் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் திறக்கும்
அன்றையதினம் 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை உள்ள அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 3-வது
பருவத்திற்கு உரிய விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு
புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 2 கோடியே 40 லட்சம்
பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.இதற்காக பாடப்புத்தகங்கள்
அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
வருகின்றன. பெரும்பாலான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. அனைத்து
பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு டிசம்பர் 20-ந்தேதிக்குள் அந்தந்த
கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் வாங்கிக்கொள்ளலாம்
தமிழ்நாடு முழுவதும் 66 குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும்
மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு
புத்தகங்களை விலைக்கு வாங்குவதற்கு வசதியாகவும் அவர்களுக்கு தனியாக
குடோன்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் அளவுக்கு
அதிகமாக அச்சிடப்பட்டு வருகிறது. இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.







