பள்ளிக் கல்வி நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்:
மாவட்டத்துக்கு ஒரு சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி நிர்வாக அலுவலர்கள் சென்னையில் புதன்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு துணை இயக்குநர், இணை இயக்குநர் போன்ற பணியிடங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் ஜி.நாகலட்சுமி, செயலாளர் சு.ஹரிபாஸ்கர், மாநில அமைப்புச் செயலாளர் டி.எல். சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







