உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில்,
பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம்
பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில்,
உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு,
புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி,
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல்
எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே
வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட
உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால்,
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு,
பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ் நாடு முழுவதும் 1.8.2013 நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளனர்.
மேலும் தமிழ் நாடு முழுவதும் 1.8.2013 நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...