கல்வி
நிறுவனங்களில் ராக்கிங்கை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
பி.சதாசிவம் கூறினார்.பட்டமளிப்பு விழாசென்னை பல்கலைக்கழகத்தின் 156-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்தவர்களை துணைவேந்தர் பேராசிரியர் தாண்டவன் வரவேற்று அறிக்கை படித்தார்.கவர்னர் கே.ரோசய்யா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். 108
பேர் பிஎச்.டி. பட்டமும், 120 பேர் பல்கலைக்கழக ரேங்க் எடுத்ததற்கான
பதக்கங்களும், 60 பேர்களுக்கு பரிசுகளும், பெற்றனர். கல்பாக்கம் விஞ்ஞானி
எஸ்.வேணுகோபால் ஆராய்ச்சி (மெட்டல் பாமிங்) கட்டுரை சமர்ப்பித்து
டி.எஸ்.சி. பட்டம் பெற்றார். தொலை தூரக்கல்வியில் படித்த 13
ஆயிரத்து 650 மாணவ-மாணவிகளும், கல்லூரிகளில் படித்த 26 ஆயிரத்து 564
பேர்களும் பட்டம் பெற்றனர். தன்னாட்சி கல்லூரிகளில் படித்த 23 ஆயிரத்து 28
பேர்களும் பட்டம் பெற்றனர். மொத்தம் 64 ஆயிரத்து 475 பேர்களுக்கு பட்டம்
கொடுக்கப்பட்டது.விழாவில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றியதாவது:-பல்கலைக்கழக பொறுப்புபல்கலைக்கழகமோ
அல்லது கல்லூரியோ புத்திசாலியான மாணவர்களை மட்டும் உருவாக்குவதுடன் அதன்
கடமை முடிந்து விடாது. நேர்மையான மாணவர்களையும், பொதுமக்களிடத்தில்
நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள மாணவர்களையும் உருவாக்க வேண்டும்.நமது
அரசியல் அமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சம கல்வியும், வேலைவாய்ப்பும்
கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அங்கு சமூக நீதி உள்ளதாக அர்த்தம்.நான்
பள்ளிக்கூடத்தில் படித்தபோது டாக்டராக விரும்பினேன். மெரிட் அடிப்படையில்
எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. எனவே கலைத்துறையில் பட்டம்
பெற்றேன். தலைமை நீதிபதியாக வருவேன் என்று...பின்னர் எனக்கு
திருமணம் நடைபெற்றது. எனது திருமண வரவேற்பின்போது நான் நன்றாக
இருக்கவேண்டும் என்று எண்ணி நல்லவர் ஒருவர் என்னை சட்டம் படிக்க சொன்னார்.
அதன்படி நான் சட்டம் படித்தேன். நான் அரசு பள்ளியில்தான் படித்தேன். நான்
சட்டம் படித்த பின்னர் எனது வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் நடந்தன. உங்களைப்போல இருந்தபோது, நான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ராக்கிங்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்கல்வி
நிறுவனங்களில் ராக்கிங் நடப்பதால் அந்த நிறுவனங்களின் கல்வித்தரம்
குறைந்துவிடும். ராக்கிங் கொடுமையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் நடக்க வில்லை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார்.உயர்
கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.







