யுஎஸ் பள்ளி ஆசிரியர்களுக்கு விப்ரோ வழங்கும் பெல்லோஷிப் படிப்பு:
முன்னனி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும்,
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகமும் இணைந்து, அமெரிக்க பள்ளி ஆசிரியர்கள்
(கணிதம் மற்றும் அறிவியல்) பாடப்பிரிவில் திறமையை வளர்த்துக் கொள்ள
பெல்லோஷிப் புரோக்ராம் அறிவித்துள்ளது.
சிக்காகோவில் உள்ள பள்ளிகளில் இரண்டு பாடங்களிலும், திறமையான 100
ஆசிரியர்களை தேர்வு செய்து, 2 வருடத்திற்கு $2.8 மில்லியன் செலவில் பயிற்சி
அளிக்கப்படும் என்று நியு ஜெர்சியில் விப்ரோ தலைமை நிர்வாகி டி.கே.கொரியன்
தெரிவித்துள்ளார்.
இதனால், அறிவியல் மற்றும் கனிதத்தில் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.







