இரவு உணவு
இரவு உணவு சாப்பிடாமல் உங்கள் குழந்தையை படுக்கைக்கு அனுப்ப அனுமதிக்க
வேண்டாம். ஏனெனில், அர்த்த இராத்திரியில் 'அம்மா, பசிக்குது' என்று அவர்
அடிக்கடி எழுந்து விடுவார். அது போன்ற நேரங்களில் உணவு கொடுத்தால், அன்றைய
தூக்கம் கோவிந்தா! எனவே, உங்கள் குழந்தைக்கு நல்ல இரவு உணவை கொடுத்து
பின்னர் தூங்கச் செய்யுங்கள்.
உடை
வேந்நீர் குளியலுக்குப் பின்னர், லூஸான மற்றும் வசதியான உடைகளை அணிவதற்கு
அவர்களை பழக்கப்படுத்துங்கள். இந்த பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம்
உங்களுடைய குழந்தையை தூங்கச் செய்யும் முயற்சி மிகவும் வெற்றிகரமானதாக மாறி
விடும்.
ஆரோக்கியமான பழக்கங்கள்
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை நடக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுக்கவும். முகத்தை கழுவுதல், துணியை மாற்றுதல், பல் விளக்குதல் அல்லது
வெளியே சென்று வருதல் ஆகிய பழக்கங்கள் நல்லது. படுக்கைளில் அவ்வப்போது
செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்களைப் பற்றி அவர்கள் அறியச் சொல்லிக்
கொடுப்பதும் மிகவும் முக்கியமான பழக்கமாகும்.
கதை சொல்லுங்க டாடி
நீங்கள் படிப்பதையெல்லாம் உங்கள் குழந்தை புரிந்து கொள்வாள் என்று
நினைக்காதீர்கள். கதைகளை வாசித்துக் காட்டி அவளை தூங்கச் செய்வதை பழக்கமாக
வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு கதை சொல்லிக் கொண்டே படுக்கையில்
தூங்குவதற்கான டிப்ஸ்களை அவர்களுக்கு கொடுத்து வந்தால், அவர்கள் வசதியாக
தூங்க முடியும்.
மெல்லிசையே என் மெல்லிசையே
பிரச்னையில் இருக்கும் மனதை சாந்தப்படுத்துவது இசையைத் தவிர வேறென்றும்
இல்லை. குழந்தைக்கும் இது பொருந்தும் என்றால் ஆச்சரியம் இல்லை. ஏதாவதொரு
மெல்லிசையை ஓட விடுவதால் குழந்தைகள் ஓய்வாக இருக்க முடியும். மெல்லிசையை
ஓடச் செய்து உங்கள் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தி விட்டு தூங்கச் செய்வது
ஒரு நல்ல வழிமுறையாகவே உள்ளது.
என்னருமை மகனே குட் நைட்!
உங்கள் மகனுக்கு ‘குட் நைட்' சொல்வதன் மூலம் இது தூங்குவதற்கான நேரம்
என்பதை அவன் அறியச் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் குழந்தை தூங்கத்
தயாராக முடியும். சில நேரங்களில் அவரை முத்தமிட்டோ அல்லது அணைத்துக் கொண்டே
கூட குட் நைட் சொல்லலாம்.
என்னருமை மகனே குட் நைட்!
உங்கள் மகனுக்கு ‘குட் நைட்' சொல்வதன் மூலம் இது தூங்குவதற்கான நேரம்
என்பதை அவன் அறியச் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் குழந்தை தூங்கத்
தயாராக முடியும். சில நேரங்களில் அவரை முத்தமிட்டோ அல்லது அணைத்துக் கொண்டே
கூட குட் நைட் சொல்லலாம்.
தூங்கும் சூழல்
இவ்வளவு வழிமுறைகளையும் நீங்கள் முறையாக பின்பற்றினாலும், தூங்கும் இடம்
பாதுகாப்பானதாக இல்லை என்று உங்கள் குழந்தை நினைத்தால் தூக்கம் வரவே வராது.
எனவே, உங்கள் குழந்தைக்கு வசதியானதாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும்
தூங்கும் இடங்களில் வைக்க வேண்டும். அது ஒரு பொம்மையாகவோ அல்லது
தலையணையாகவோ என எதுவாகவும் இருக்கலாம்.THANKS TO ONE INDIA