தென்னிந்திய பண்பாடு சார்ந்த கர்நாடக இசையை இணையம் மூலமாக இலவசமாக
கற்றுக்கொள்ளலாம். அமெரிக்காவைச் சார்ந்த Go4Guru இணைய கல்வி நிறுவனம் இசை
பிரியர்களுக்காக அனுபவம் வாய்ந்த இசை ஆசிரியர்களை வைத்து நடத்த இருக்கும்
இணையம் சார்ந்த இலவச கர்நாடக இசை
வகுப்புகள் பிப்ரவரி 2ம் தேதி முதல்
ஆரம்பமாகிறது. ஆறு வயதில் இருந்து பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள்
இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். உலகத்தில் எந்த மூலையில்
இருந்தாலும் கர்நாடக இசையை இணையம் மூலமாக இலவசமாக கற்றுக்கொள்ள ஓர் அரிய
வாய்ப்பு. இதில் முதற்கட்டமாக ஆரம்பநிலை மாணவர்கள் மட்டும் கலந்து
கொள்ளலாம். Webcam & mic வசதிகளுடன் இந்த இணைய வகுப்புகள் நடைபெறுவதால்
மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும். இந்த
வகுப்புகள் முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் இணையம் மூலமாக வீட்டில்
இருந்தபடியே இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம் . இந்த இலவச இணைய வகுப்புகளில்
சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com இணைய தளத்தில் தங்கள் பெயரை
முன்பதிவு செய்து கொள்ளலாம். - நியூயார்க்கிலிருந்து காயாம்பூ ராமலிங்கம்







