Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
DEARNESS ALLOWANCE
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு !மற்றும் குறைந்த பட்ச பென்சன் ரூ. 1000: மத்திய மந்திரி சபை ஒப்புதல்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு !மற்றும் குறைந்த பட்ச பென்சன் ரூ. 1000: மத்திய மந்திரி சபை ஒப்புதல்:
டெல்லியில் இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு முடிவுகள் எடுத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தேர்தல் விரைவில் வர உள்ளதால் அரசு ஊழியர்களையும் மக்களையும் கவரும் வகையில் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப் படி உயர்வு வழங்க மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வு பொருந்தும்.
மத்திய அரசின் இந்த முடிவால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்று பலன் அடைவார்கள். அது போல சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வு 100 சதவீதத்தை எட்டியதைத் தொடர்ந்து அதில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
அதை இன்று மத்திய மந்திரி சபை ஏற்றுக் கொண்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மத்திய அரசு ஊழியர்கள் கணிசமான அளவுக்கு சம்பள உயர்வைப் பெறுவார்கள். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1000 வழங்கவும் இன்று மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
உர உற்பத்தி விலையை டன்னுக்கு ரூ.350 உயர்த்தவும் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் செலவை உயர்த்த தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. அதற்கும் இன்று மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. ஊழல் ஒழிப்புக்காக மத்திய அரசு ஏற்கனவே சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.
அந்த வரிசையில் ஊழல் ஒழிப்புக்காக 2 அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு அவசரச் சட்டம் கொண்டு வரக் கூடாது என்று பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் இன்றைய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் அதன் மீதான முடிவு ஒத்தி வைக்கப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








