தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம்
ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2
நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.
இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும்
கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில்,
கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை
எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம்
செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.
சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன்
கூறுகையில், "55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின்
செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்"
என்றார்.







