நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணி்க்கை
பற்றாக்குறை நிலவுவாதல் கூடுதலாக 15 ஆயிரத்து 800 இடங்கள் உருவாக்கப்பட
உள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நாட்டின் மக்கள் தொகைக்கு
ஏற்ற விதத்தில் மருத்துவர்கள் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் ஆயிரத்து 700
மக்களுக்கு ஒரு டாக்டர் என்ற விகித்ததி்ல் மட்டுமே உள்ளனர். இதன் மூலம்
பற்றாக்குறையை சரிசெய்ய முடியாது. இதற்காக வரும் 12 மற்றும் 13-வது தி்ட்ட
காலங்களில் கூடுதலாக நாடு முழுவதும் 187 மருத்துவ கல்லூரிகள்
துவங்கப்படும். இதற்காக மத்திய அரசு மாவட்ட தலைமை மருத்துவனைகளில் தரம்
உயர்த்த முடிவு செய்துள்ளது.
மேலும் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான இடங்களையும்
அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மருத்துவக்கல்லூரிகள் துவக்குவதற்கு
தேவையான ஆசிரியர் மாணவர் விகிதம், தேவைப்படும் நிலம், படுக்கை எண்ணிக்கை,
சேர்க்கை திறன் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடுகள் திருத்தப்பட உள்ளது. என
தெரிவித்தார்.







