கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதரபாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள்
பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை
மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது.இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS
WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்துள்ளது.உரிய கட்-ஆப்
மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்பட்டது ஆனால்.
இதுவரை வரலாறு பாடத்துக்கான புதிய பட்டியல் வெளியிடப் படவில்லை2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.தற்போது முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில் தங்கள் நியமனம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணிநியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.