பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது:


தேர்வுப் பணியில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மார்ச், 3 முதல், 25 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுத உள்ளனர். தேர்வுக்கு, இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. இதனால், தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், முழுவீச்சில் செய்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு, 2,020 மையங்களில், தேர்வு நடந்தன. இந்த ஆண்டு, கூடுதலாக, 80 மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளன. எனவே, 2,100 மையங்களில், 40 ஆயிரம் அறைகளில், தேர்வு நடக்க உள்ளது.

வினாத்தாள் : வினாத்தாள் கட்டுகள், பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் கேள்வித்தாள், "லீக்' ஆனது. இதுபோன்று எதுவும் நடக்காத வகையில், பாதுகாப்பான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மைய, முதன்மை கண்காணிப்பாளரில் துவங்கி, உதவியாளர் வரை, பல்வேறு நிலைகளில், ஆசிரியர், ஆசி ரியர் அல்லாத ஊழியர் என, ஒரு லட்சம் பேர், தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில்,""மொழிப்பாட தேர்வுகளின்போது, ஒரு லட்சம் பேர், பணியில் ஈடுபடுவர். இதர பாடங்களின்போது, 50 ஆயிரம் பேர் வரை, தேர்வுப்பணியில் ஈடுபடுவர். பறக்கும் படையில், 4,000 உறுப்பினர்கள் இடம்பெறுவர். முக்கிய தேர்வுகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

சென்னையில் ஆலோசனை : இதற்கிடையே, தேர்வை, சுமுகமாக நடத்துவது குறித்தும், எவ்வித முறைகேடு, புகார்களுக்கு இடமின்றி நடத்துவது குறித்தும் விவாதிக்க, 25ம் தேதி, சென்னையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. அமைச்சர், வீரமணி, செயலர், சபிதா, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் உட்பட பலர், கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்திற்குப்பின், மாவட்ட வாரியாக, தேர்வு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ள அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்படும் என, தெரிகிறது. தனியார் பள்ளிகள் அதிகம் நிறைந்துள்ள, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை, அதிகாரிகள், தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H