இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.