பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை
ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால், பள்ளி
மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு,
பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், மத்திய
அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய
திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த தேர்வை, 1.6 லட்சம் பேர் எழுத இருந்தனர்.
கடைசி நேரத்தில், கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால், அவை, நேற்றிரவு வரை,
தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால், இன்று காலை, 10:00 மணிக்கு
நடக்க இருந்த தேர்வை, பிற்பகல், 2:00 மணிக்கு தள்ளிவைத்து, தேர்வுத் துறை
அறிவித்துள்ளது. இந்த விவரம், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, இன்று
காலை, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.







